
புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சிவா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மேடையில் இருந்து படிகள் வழியாக கீழே இறங்கி நின்றபடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்தார். இதில்அவருக்கு தலை முன் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.