நெய்வேலி போராட்டம்: அன்புமணி விடுவிப்பு!

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்புமணி (கோப்புப்படம்)
அன்புமணி (கோப்புப்படம்)

நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை விரிவுபடுத்த விவசாயிகளின்  நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை வெளியேற வலியுறுத்தியும் நெய்வேலியில் இன்று(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட தொண்டர்களுடன் புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது அன்புமணி கைது செய்யப்பட்டு தடுப்பு  காவலில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் அரசுப் பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழல்  நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com