ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் முக்தி அடைந்தார்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தின் 11 வது மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் வயது முதிர்வால் வெள்ளிக்கிழமை முக்தி அடைந்தார்.
ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் முக்தி அடைந்தார்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தின் 11 வது மடாதிபதியாக இருந்து வந்த ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள் வயது முதிர்வால் வெள்ளிக்கிழமை முக்தி அடைந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தின் 11 வது மடாதிபதியாக கடந்த 2004 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் ஸ்ரீ அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் சுவாமிகள். இவரது இயற்பெயர் சே.ராமானுஜ ஆசாரியார். விடுதலைப் போராட்ட வீரரான இவர் எம்.எஸ். சுப்பிரமணிய ஐயருடன் இணைந்து தீவிர தேச பக்தியை பரப்பியவர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 60 ஆம் ஆண்டு விழாவை சென்னை மைலாப்பூரில் நடத்தியவர். கிருபானந்த வாரியார் சுவாமிகளுடன் கடலூரில் ஒரே மேடையில் தோன்றி, நாங்கள் இரு குழல் துப்பாக்கி என்றும், எங்கள் இலக்கு ஒன்றே என்றும் முழக்கமிட்டவர்.

ஸ்ரீபாகவத் ராமானுஜர் என்ற நூலை வெளியிட்டு காஞ்சி மகா பெரியவர் சுவாமிகளின் பாராட்டையும் பெற்றவர். ராமானுஜர் என்ற திரைப்படத்துக்கு கதைவசனம் எழுத உதவியதோடு அத்திரைப்படத்திலும் திருக்கோட்டியூர் நம்பியாக நடித்தவர்.

திருமால் என்ற ஆன்மீக இதழை தொடர்ந்து 32 ஆண்டுகளாக நடத்தி வைணவக் கொள்கைகளை மக்களிடம் பரப்பியவர். செந்தமிழ் வேதியர், ஸ்ரீவைணவ மாமணி, திருவாய் மொழி சிந்தனைச் செல்வர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர்.

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி- என்ற வைணவ தாரக மந்திரத்தை முதன் முதலில் சொன்னவர். தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் வயது முதிர்வால்  முக்தி அடைந்தார். இவரது இறுதிச்சடங்குகள் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் மடத்தில் வெள்ளிக்கிழமை  மாலையில்  நடைபெற்றது. 

தொடர்புக்கு: 9994323397

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com