மின்வாரியத்தின் அலட்சியத்தால் காலை இழந்த ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் கோச்சடை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் திடீரென விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்தது.
மின்கம்பம் மாற்றும் பணியின் போது, அறிவிப்பு பலகை வைக்காமலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றாமலும் மின்வாரிய அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டதே, ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் கால்முறிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான தேசிய போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருந்த மாணவர் பரிதி விக்னேஸ்வரனின் எதிர்கால வாழ்க்கை மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது கேள்வி குறியாகிவிட்டது.
விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற மாணவரின் கனவு கானல் நீராகி விட்டது. மாணவர் பரிதி விக்னேஸ்வரனுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும் கவனக்குறைவாக செயல்பட்டு மாணவரின் கால் பறிபோக காரணமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


