ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஆம்பூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியத்தில் உள்ளது தேவலாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ராமையன் தோப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் கழிவு நீர் கால்வாய்கள் தூய்மை செய்யப்படவில்லை, முறையான சாலை வசதியும் இல்லை என கூறி இப்பகுதி மக்கள் உள்ளாட்சி நிர்வாகிகளிடமும், மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பல்வேறு முறை புகார்கள் அளித்து வந்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை தேவலாபுரம் - வீராங்குப்பம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். 

சம்பவ இடத்துக்கு வந்த உமர் ஆபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி குபேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உஷாராணி குருவாசன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com