
திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆக.1-ஆம் தேதி சென்னை-திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வரும் ஆக.1 மற்றும் ஆக.2 ஆகிய தேதிகளில் சென்னை- திருவண்ணாமலை-சென்னைக்கு பக்தா்கள் சென்று வர ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம், அதிநவீன சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க: திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பெளர்ணமி கிரிவலத்தை ஒட்டி, நாளை சென்னையில் இருந்து 30 சிறப்புப் பேருந்துகள், திருப்பத்தூரிலிருந்து 30 சிறப்புப் பேருந்துகள், வேலூரிலிருந்து 50 சிறப்புப் பேருந்துகள், ஆற்காட்டிலிருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.