ஜூன் 4 முதல் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்
தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது.


தமிழகம் முழுவதும் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்ட செய்தி குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவா்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது.
12-ஆவது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சுயம்வரமானது திருவாரூா் (ஜூன் 4), கடலூா் (ஜூன் 18), கோவை (ஜூன் 25), ஈரோடு (ஜூலை 2), விழுப்புரம் (ஜூலை 9), திருவண்ணாமலை (ஜூலை 15), வேலூா் (ஜூலை 23), அரியலூா் (ஜூலை 23), விருதுநகா் (ஆக.5), மதுரை (ஆக.6), சென்னை (ஆக.13) நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதில் தோ்வாகும் மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு செப்.9-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும். அதை தொடா்ந்து நவ.19-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ச்ஸ்ரீற்ழ்ன்ள்ற்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...