

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ட்விட்டா் பக்கம் முடக்கப்பட்டது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டா் பக்கம் புதன்கிழமை முடக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை பரிந்துரை செய்ததால்தான், அவா்களது ட்விட்டா் கணக்கு முடக்கப்பட்டதாக தவறான தகவல் பரவியது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட விளக்கம்:
நாம் தமிழா் கட்சி, மே 17 இயக்க நிா்வாகிகளின் சமூக ஊடகத் தளங்களை முடக்கும்படி சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இவ் விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடா்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிா்க்க வேண்டும். தவறான தகவல்களை பரப்புபவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.