விதிகளை மீறி விளம்பரப் பலகை, பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை

அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் வசூக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. 
விதிகளை மீறி விளம்பரப் பலகை, பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை: அனுமதியின்றி விளம்பர பலகைகள், பேனர்களை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் வசூக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. 

கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில், விளம்பர பலகைகள், பேனர்கள் விவகாரத்தில் மீண்டும் கட்டுப்பாடு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

விதிகளை மீறி ராட்சத விளம்பர பலகைகள் வைத்தால் நிறுவனம், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. உரிமக் காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால், விளம்பர பலகை, பேனர் வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், உயிரிழப்போ, காயமங்களோ ஏற்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை பேனர் வைப்பவர்கள், நிறுவனங்கள், தனிநபர், நிலம், கட்டட உரிமையாளர்களே தர வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com