அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை என்ன?

அரிக்கொம்பன் யானை குறித்த தற்போதைய நிலை என்ன என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
அரிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை என்ன?

அரிக்கொம்பன் யானை குறித்த தற்போதைய நிலை என்ன என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
அதில், தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது.
அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
ஜீன் 6ம் தேதி முதல் வன உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு, முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிக்கொம்பன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி
மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com