மாற்றுத்திறனாளி மகனுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மகன் மற்றும் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாற்றுத்திறனாளி மகனுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி மகன் மற்றும் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

பண்ருட்டி வட்டம், வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், வயது முதிர்ந்த தாய், மாற்றுத்திறனாளி மகன், இளைய மகன் ஆகியோருடன் வந்திருந்தார்.

அப்போது அவர் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணையை தன்மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்து, தண்ணீரை ஊற்றி அறிவுரைகள் கூறி மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

அவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, என் மீது பொய்யான தகவலை ஊரில் சிலர் பரப்பி விட்டனர். இதை நம்பி ராஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என் வீட்டையும், காரையும் அடித்து உடைத்துத் தீயிட்டுக் கொளுத்திவிட்டனர். ஊருக்குள் வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். 

இதுகுறித்து முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர் காவல் நிலையம், எஸ்பி.,அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை கோரி 21.2.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் குடும்பத்தோடு தர்னாவில் ஈடுபட்டேன். இதையடுத்து 22.2.2023 அன்று ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுநாள் வரையில் நான் வீரசிங்கன்குப்பம் செல்ல முடியவில்லை. வயது முதிர்ந்த தாய், மாற்றுத்திறனாளி மகனைப் பார்க்க முடியவில்லை. 6 மாதமாக நாடோடியாக வாழ்ந்து வருகிறேன்.

ஊராட்சி மன்றத் தலைவர் தேசிங்கு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து ஊருக்குள் நுழையக்கூடாது, மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து 27.5.2023 அன்று எஸ்பி., அலுவலகத்தில்  புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட நடவடிக்கை எடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

12பிஆர்டிபி1
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் தீக்குளிக்க முயன்ற தந்தை மற்றும் குடும்பத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com