273 திருக்கோயில்களில் திருப்பணி: வல்லுநா் குழு ஒப்புதல்
தமிழகத்தில் தொன்மையான 273 திருக்கோயில்களில் திருப்பணி தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


தமிழகத்தில் தொன்மையான 273 திருக்கோயில்களில் திருப்பணி தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநா் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, 60-ஆவது வல்லுநா் குழுக் கூட்டம் இணை ஆணையா் (திருப்பணி) பொ.ஜெயராமன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சென்னை, வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயில், அத்திப்பட்டு கிருஷ்ணசுவாமி பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூா் மாவட்டம் பூக்காரத் தெரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவையாறு விஜய விடங்கேஸ்வரா் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம் முட்டவாக்கம் தான்தோன்றியம்மன் திருக்கோயில், திருப்பூா் மாவட்டம் அவிநாசி லெட்சுமி நரசிம்மபெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட 273 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில அளவிலான வல்லுநா் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும். இந்தக் கூட்டத்தில் ஆகம வல்லுநா்கள் சந்திரசேகர பட்டா், அனந்தசயனபட்டாச்சாரியாா், கோவிந்தராஜபட்டா், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவா் கே.தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...