செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல்
செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கில் காணொளி வாயிலாக இன்று ஆஜரான செந்தில்பாலாஜி, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதால் காவல் வழங்கினால் உடல்நிலை பாதிக்கப்படும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அவரிடம் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை வரும் 23ஆம் தேதி காணொளி வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் அமைச்சா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை சந்தித்த பின்னா், வரும் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரியும், செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் திமுக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...