பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் மரத்தில் மோதி விபத்து!

இலுப்பூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

விபத்துக்குள்ளான அரசு வாகனம்.

Updated On :16 ஜூன் 2023, 3:31 pm IST

இலுப்பூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி. புதுக்கோட்டையில் வசித்து வரும் இவர், தினமும் விராலிமலை அலுவலகம்  வந்து செல்கிறார். 

இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணிக்கு ஜீப்பில் வந்த போது, இலுப்பூர் மேட்டுச் சாலை தனியார் கல்லூரி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் காயம் அடைந்த கலைச்செல்வி மற்றும் ஓட்டுநர் ராஜசேகர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து இலுப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.