அடுத்த 2 மணிநேரத்தில் இங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 18) வெளியிட்டுள்ள சுட்டுரை அறிவிப்பில்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும்,

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று (ஜூன் 18) காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னையில், ஆலந்தூர்,எழும்பூர், கிண்டி, குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பூவிருந்தவல்லி பகுதிகளில் அடுத்த 3 மணி நேரததுக்கு லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று, அயனாவரம், பெரம்பூர், புரசைவாக்கம், திருவள்ளூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com