ஒடிசாவில் கோலாகலமாகத் தொடங்கிய ரத யாத்திரை!

ஒடிசா மாநிலம் புரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது. ரத யாத்திரையில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் புரியில் குவிந்தனர். 
ஒடிசாவில் கோலாகலமாகத் தொடங்கிய ரத யாத்திரை!

ஒடிசா மாநிலம் புரியில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது. ரத யாத்திரையில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் புரியில் குவிந்தனர். 

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. 

அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை 9 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய இக்கோயிலில் ஜெகந்நாதரான கிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை ஆகிய மூவருக்கும் நடைபெறும் ரத யாத்திரை உலக புகழ்பெற்றது. 

காலை 9 மணிக்கு முன் ஜெகந்நாதர், பாலபத்ரர், சுபத்ரா, சுதர்சன சிலைகள் தேர்களில் நிறுவப்பட்டு மங்கள ஆர்த்தி செய்யப்பட்டது. பிற்பகல் ஒரு மணியளவில் புரியின் அரசர் கஜபதி திவ்யசிங் தேவ், தேர்களின் முன் தங்கத் துடைப்பம் கொண்டு துடைப்பார். 

பின்னர், 3 மணியளவில் தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலின் முன் திரண்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com