பழக்கடையில் பணத்தைத் திருடும் எலி: உரிமையாளர் அதிர்ச்சி

பழக்கடையில் பணத்தைத் திருடும் எலி: உரிமையாளர் அதிர்ச்சி

திருப்பூரில் உள்ள பழக்கடையில் அன்றாடம் வைக்கும் பணத்தை எலி திருடிச் செல்வதை சிசிடிவில் பார்த்த உரிமையாளரை அதிர்ச்சியடைந்துள்ளார். 
Published on

திருப்பூரில் உள்ள பழக்கடையில் அன்றாடம் வைக்கும் பணத்தை எலி திருடிச் செல்வதை சிசிடிவில் பார்த்த உரிமையாளரை அதிர்ச்சியடைந்துள்ளார். 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாகப் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில்  நாள்தோறும் இரவு செல்லும்போது பழக்கூடையில் ரூ.50, ரூ.100 என போட்டுச் செல்லது வழக்கம். 

அவ்வாறு கூடையில் போடும் பணம் மறுநாள் வந்து பார்க்கும்போது காணாமல் போவது வாடிக்கையாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சிசிடிவி கேமராவைக் கடையில் பொருத்தியுள்ளார். இதன் பின்னரும் நாள்தோறும் அதிகாலையில் 4 மணி அளவில் மட்டுமே பணம் காணாமல் போவது தெரியவந்தது. 

இதையடுத்து, கடை உரிமையாளர் சிசிடிவி கேமராப் பதிவை திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பார்த்துள்ளார். அப்போது பழங்களுக்கு இடையில் புகுந்து வந்த எலி ஒன்று கல்லாப்பெட்டியாக வைக்கப்பட்டிருந்த பழக்கூடையிலிருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிப் பதிவாகியிருந்தது. 

கடையிலிருந்த பொருள்களை வெளியே எடுத்து வைத்துப் பார்த்தபோது எலி தங்கியிருந்த வலை தெரிய வந்தது. இந்த வலையில் எலி இதுநாள் வரையில் எடுத்துச் சென்ற ரூ.1,500 எந்தவிதமான சேதமும் இல்லாமல் இருந்தது. 

நாம் எல்லோரும் பழத்தைத் திருடிச் செல்லும் எலியைத்தான் பார்த்திருப்போம். ஆனால் பணத்தைத் திருடிச் சென்று எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் எலி சேர்த்து வைத்திருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com