தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக, சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான  குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர்,  சார் ஆட்சியர் கௌரவ குமார் செய்தியாளர்களிடம்   கூறியது: 

ஸ்டெர்லைட் ஆலை உள்ளேயும், வெளியேயும்  சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.

தற்போது ஆலையில் உள்ள ஜிப்சத்தை உடைக்கும் பணி துவங்கியுள்ளது. கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை முதல்  அகற்றப்பட்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் பசுமை வளையத்தைப் பராமரிக்கும் பணியும் இன்று துவங்கியுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com