எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும்?

தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகவும், மூடப்படவுள்ள கடைகளின் பணியார்களை வேறு இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் உடனடியாக மூடப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கு அரசாணையும் வெளியானது.

இந்நிலையில், நாளைமுதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com