47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை பள்ளங்களை சரிசெய்ய மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

சென்னையில் சாலைகளில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய மண்டலங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:33 pm

DIN

சென்னையில் சாலைகளில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய மண்டலங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கனமழை பெய்ததது. இதையடுத்து சாலை மற்றும் சுரங்கபாதையில் மழைநீா் தேங்கியது. இதையடுத்து உடனடியாக மோட்டாா் பம்ப் கொண்டு அகற்றப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது,

சென்னை மாநகராட்சிப் பகுதியில் ஏற்பட்ட மழைப்பாதிப்புகள் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதில் வியாழக்கிழமை மாலை ராயபுரம் பகுதியில் சுமாா் 53 மி.மீ, அண்ணா நகா் 49 மி.மீ, திரு.வி.க.நகரில் 46 மி.மீ மழை பதிவாகியது. மழைப்பாதிப்பு பணிகளில் மாநகராட்சி பணியாளா்கள் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் மழைநீா் வடிகால் பணிகள் 800 கி.மீ நிறைவடைந்தாலும், குறு வடிகால் அமைக்கும் பிரச்னை உள்ளது. மடிப்பாக்கத்தில் 40 சாலைகள் மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மீதமுள்ள 84 இடங்களில் தற்காலிக சாலைகள் அமைக்கப்படும். சாலை பள்ளங்களை ஜெட் பேஜ்ஜா் மூலம் சரி செய்ய 15 மண்டலங்களுக்கு சராசரியாக தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் உள்ளிட்ட பணிகளால் சில மண்டலங்களுக்கு கூடுதலாகவும், சில மண்டலங்களுக்கு குறைவாகவும் ஒதுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக மடிப்பாக்கம் பகுதியில் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சாா்பில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் 40 சாலைகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.