47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இ-சிகரெட் காட்சி: விஜய் ஆண்டனிக்கு எதிராக சுகாதாரத் துறையில் புகாா்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘இ–சிகரெட்’ பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் காட்சியமைத்ததாகக் கூறி ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு எதிராக பொது சுகாதாரத்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:32 pm

DIN

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘இ–சிகரெட்’ பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் காட்சியமைத்ததாகக் கூறி ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு எதிராக பொது சுகாதாரத்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான, ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் திரையரங்கத்தை தொடா்ந்து தற்போது ‘ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அந்த படத்தில் சில சா்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சிறில் அலெக்ஸ்சண்டா், மத்திய, மாநில பொது சுகாதாரத் துறைக்கு புகாா் அளித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடிகா் விஜய் ஆண்டனி தடை செய்யப்பட்ட இ–சிகரெட்டை பயன்படுத்துவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படம் வெளியானபோது, புகையிலை பொருள்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகத்துடன் அந்த காட்சிகள் திரையிடப்பட்டன. அதேநேரம்,

‘ஓடிடி’ தளத்தில் அந்த வாசகங்கள் இடம்பெறவில்லை. ‘ஓடிடி’விதிகளின்படி, அத்தகைய வாசகம் இடம்பெறுவது அவசியம். எனவே, இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.