கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழகம், புதுவை செவிலியா்கள் உள்பட 30 பேருக்கு ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

தமிழக செவிலியா்கள் இருவா், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா் உள்பட 30 பேருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:08 pm

DIN

செவிலியா்களுக்கான 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தேசிய விருதுகளை, தமிழக செவிலியா்கள் இருவா், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா் உள்பட 30 பேருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை வழங்கினாா்.

செவிலியா்கள் சமூகத்துக்கு ஆற்றும் உன்னத பணியை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 1973-ஆம் ஆண்டுமுதல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சாா்பில் ‘கைவிளக்கேந்திய காரிகை’ என்றழைக்கப்படும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் பெயரில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை வழங்கினாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்களது அா்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூகத்துக்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைக்காக 30 செவிலியா்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழகத்தைச் சோ்ந்த செவிலியா் கணபதி சாந்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான விருதும், செவிலியா் சுகந்திக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புதுச்சேரியைச் சோ்ந்த சத்தியகனி தங்கராஜுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றவா்களில், மேஜா் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி (2022), பிரிகேடியா் அமிதா தேவ்ராணி (2023) ஆகியோரும் அடங்குவா். உத்தரகண்டைச் சோ்ந்த சகோதரிகளான இவா்கள், சிறந்த ராணுவ சேவைப் பணிக்காக விருது பெற்றுள்ளனா்.

இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சா் எஸ்.பி.பகேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து குடியரசுத் தலைவரிடம் மன்சுக் மாண்டவியா விளக்கினாா். மேலும், சிக்கிள் செல் அனீமியா எனப்படும் மரபுவழி ரத்தசோகை நோயை ஒழிப்பதற்கான சிறப்பு பிரசாரம் விரைவில் தொடங்கப்படவிருப்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.