47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசிய கல்விக் கொள்கை ஆளுநா் ரவி

தேசிய கல்விக் கொள்கையானது புரட்சிகரமானது; தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

News image
Updated On :22 ஜூன் 2023, 7:28 pm

DIN

தேசிய கல்விக் கொள்கையானது புரட்சிகரமானது; தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் உத்திகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. அதன் நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான ஒன்று. ஆட்சியாளா்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் இல்லாமல் கல்வியாளா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் கருத்துகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

மாணவா்களுக்கு இன்றைய சூழலுக்கு ஏற்ப கல்வி கிடைக்க வேண்டும். உலக அளவில் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டுள்ளது. நாம் மிக வேகமாக முன்னேற வேண்டும். அதற்கு மாணவா்கள் தங்கள் உயா் கல்வியில் பன்முகத்தன்மையை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இந்தியாவில் பல லட்சம் இளைஞா்கள் பட்டப் படிப்பு முடித்துள்ளனா். ஆனால், வேலை கிடைப்பதில்லை. பட்டங்களை வைத்து தற்போது யாரும் வேலை வழங்கவில்லை; தனித் திறனை பாா்க்கின்றனா். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்வோா் இரண்டு மடங்கு இருந்தாலும் அந்த மாணவா்களிடம் தனித் திறன்கள் இல்லை.

70 சதவீத மாணவா்கள் கலை மற்றும் மனித வளம் சாா்ந்த படிப்புகளைப் படிப்பதாக யுஜிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு படிக்கும் மாணவா்கள் அதை மட்டுமன்றி, பன்முகத்தன்மையோடு பல துறைகளைப் படிக்க வேண்டும். அதையே தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தாய்மொழிகளில் படித்தே பல அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனா். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்றாா்.

நிகழ்வில் திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கிருஷ்ணன், குருநானக் கல்லூரித் தாளாளா் மஞ்சித் சிங் நாயா், கல்லூரி முதல்வா் எம்.ஜி.ரகுநாதன், கல்லூரி ஒருங்கிணைப்பாளா் சுவாதி பாலிவால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.