
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கலைஞர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழ ஒப்புதல் தந்த நிலையில் மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகமும் இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதில், ஐஎன்எஸ் அடையாறு கடற்கபடை தளத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்த ஒரு நிலையிலும் நிலத்தடி நீரை பயன்படுத்தக் கூடாது. திட்டத்தை செயல்படுத்தும்போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப் பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது உள்ளிட்ட 15 நிபந்தனைகளுடன் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிக்க: முதல் திரிபுரா முதல்வரின் மனைவிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு!
ஏதேனும் தவறான தகவல் இருப்பது தெரியவந்தால் அனுமதி திரும்ப பெறப்படும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.