வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமானவரித் துறை சோதனை
வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.


வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடையில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
செளகாா்பேட்டை துளசிங்கம் தெருவில் ராதா மோகன் புருஷோத்தம் தாஸ் என்ற பெயரில் பிஷ்ரோல் சீதாராம் என்பவா் தங்கம்,வைரம் நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் செய்து வருகிறாா். இவா் வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித் துறைக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையினா் விசாரணை செய்தனா்.
விசாரணையில், வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ராதா மோகன் புருஷோத்தம் தாஸ் நகை கடை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அந்த கடையின் உரிமையாளா் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித் துறையினா் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
இந்த சோதனை மாலையையும் தாண்டி நீடித்தது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...