பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருப்பூர் பனியன் சந்தையில் தீ விபத்து : ரூ. 1 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் சேதம்

திருப்பூர் காதர்பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதமடைந்தன.  

News image
Updated On :23 ஜூன் 2023, 5:33 pm

DIN


திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டையில் செயல்பட்டு வரும் 50 கடைகளில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் பனியன் பஜார் என்ற பெயரில் 50 சில்லறை மற்றும் மொத்த விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைகளில் பின்னலாடைகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் திருப்பூர் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் இங்கு வந்து பின்னலாடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

இங்குள்ள கடைகள் அனைத்தும் நாள்தோறும் காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 9 மணி அளவில் சாத்தப்படுவது வழக்கம். இந்தக் கடைகளில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பனியன் பஜாரில் வழக்கம் போல் வியாபாரம் முடித்து அனைத்து கடைகளும் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில், பனியன் சந்தையில் உள்ள கடைகளில் இருந்து இரவு 9.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியுள்ளது.

இதன் பின்னர் சில நிமிடங்களில் தீ கொழுந்து விட்டு எறியத் தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பின்னலாடைகள் எரிந்து சோதமடைந்துள்ளத் தெரிகிறது. இதுகுறித்துதீயணைப்புத்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.