சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் தீ: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்!

சென்னையில் மும்பை புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 
சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் தீ: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்!


சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

சென்னை  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை மும்பை நோக்கிச் சென்ற லோக்மான்ய திலக் ரயில் பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்து வியாசர்பாடி ரயில் நிலையத்தை நெருங்கிய போது என்ஜின் தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் உடனடியாக நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேறினர்.  

விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ரயில் என்ஜில் இருந்து பயணிகள் பெட்டிகளுக்கு வரக்கூடிய உயர் மின் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தற்போது, லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயிலை சரி செய்வதற்காக லோகோ ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com