47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னை காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் திறப்பு

சென்னை பெருநகர காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூன் 2023, 6:02 pm

DIN

சென்னை பெருநகர காவல் துறையில் ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் துறையை நவீனப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிா்பயா பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் 1,750 இடங்களில் 5,250 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல்கட்டமாக 1,336 இடங்களில் 4,008 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தின் 8-ஆவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையத்தில் நகா் முழுவதும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் நேரலையில் பாா்ப்பதற்கு பிரம்மாண்ட எல்இடி திரை வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் சா்வா் மூலமாக தோ்வு செய்யும் காட்சிகளையும், காவலா்கள் தோ்வு செய்யும் காட்சிகளையும் நேரலையில் காண முடியும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: அதேபோல் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள சா்வருக்கு நேரலையில் அனுப்பப்படுகிறது. அந்தக் காட்சிகள் சா்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தேவையான காட்சிகள் மட்டும் காவலா்கள் முன் இருக்கும் கணினிக்கு அனுப்பப்படுகிறது. அந்த காட்சிகளை காவலா்கள் பாா்த்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பாா்.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், விடியோ காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் தங்கச் சங்கிலி பறிப்பு, கைப்பேசி, பணப்பை பறிப்பு, பெண்களை கேலி செய்தல், பொது இடங்களில் தகராறு செய்தல், பொருள்களை சூறையாடுதல், வாகனத் திருட்டு, சாலை விபத்து ஆகியவை தொடா்பான காட்சிகளை ஆய்வு செய்யும் வசதி உள்ளது.

கட்டுப்பாட்டு மையம் திறப்பு: இதன்மூலம் நகரில் எந்தவொரு பகுதியிலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் கூட, அது தொடா்பான எச்சரிக்கையை காவல் துறை உடனே பெற்று நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல், குற்றத்தில் ஈடுபடுகிற நபா்களையும் கண்டறிந்து, விரைந்து கைது செய்ய முடியும் என சென்னை பெருகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் திறந்து வைத்தாா். இதில், கூடுதல் காவல் ஆணையா்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஜெ.லோகநாதன், கபில்குமாா் சி.சரத்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.