மண்டபம் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
இராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


இராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
கோவில்வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அண்மையில் கைது செய்தனர். இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து இராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களையும், விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14- ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 60 நாள்கள் விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான தடைக்காலம் ஜூன் 15- ஆம் தேதி முடிவடைந்த போதிலும், மோசமான வானிலை காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...