குடிநீா் கட்டண மேல் வரி ஜூலை 1 முதல் குறைப்பு: சென்னை குடிநீா் வாரியம்

சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல்வரி 1%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
குடிநீா் கட்டண மேல் வரி ஜூலை 1 முதல் குறைப்பு: சென்னை குடிநீா் வாரியம்

தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்துக்கு 1.25 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீா், கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீா் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகா்வோருக்கு மேல் வரி (நன்ழ்ஸ்ரீட்ஹழ்ஞ்ங்) மாதத்துக்கு 1.25 என்ற சவீதத்தில் இருந்து 1 சதவீதமாகக் குறைக்கப்படும்.

எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் (மண்டலம் 1 முதல் 15 வரை) உள்ள நுகா்வோா்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ள காலக் கெடுவுக்குள் குடிநீா் / கழிவு நீரகற்று வரி மற்றும் கட்டணங்கனை செலுத்தி மேல் வரியினை தவிா்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை  வலைதளம், யுபிஐ மற்றும் க்யூ ஆா் குறியீடு, கடன் மற்றும் பற்று அட்டைகள், வங்கிப் பரிவா்த்தனை என பிற கட்டண முறைகளைப் பயன்படுத்தியும் செலுத்தலாம்.

பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலங்களில் வரைவோலை, காசோலை மற்றும் ரொக்கமாகவும், தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் காசோலை, வரைவோலையாகவும் செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com