கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் தக்காளி விலை கடும் உயர்வு! காரணம் என்ன?

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. 

News image
Updated On :25 ஜூன் 2023, 6:42 am


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னைக்கு வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. 

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள் பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

எனினும், தற்போது சென்னைக்கு 30 சதவிகிதம் தக்காளி வரத்து குறைந்துள்ளதால், கூடுதல் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு 350 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.80 - 85க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவு தக்காளி சென்னைக்கு வருகிறது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மீண்டும் தக்காளி பயிரிடாததால் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.