இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சரக்கு ரயில் விபத்து: 14 ரயில் சேவைகள் ரத்து!

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

News image

விபத்துக்குள்ளான சரக்கு ரயில் பெட்டிகள்

Updated On :25 ஜூன் 2023, 5:23 am

DIN


மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும், 3 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. எனினும் முழு ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சேதங்களை சரி செய்ய 8 மணி நேரம் தேவைப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால், பாங்குரா வழித்தடத்தில் இயக்கப்படும் 14 ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.