புதுச்சேரி: மீனவர்கள் வலையில் பெருமாள் சிலை
புதுச்சேரி அருகே மீனவர்களின் வலையில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த பெருமாள் சிலை சிக்கியது.


.
புதுச்சேரி: புதுச்சேரி அருகே மீனவர்களின் வலையில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த பெருமாள் சிலை சிக்கியது.
கடல் அடியில் மலையுடன் கூடிய பெருமாள் கோவில் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளது. வலையில் சிக்கிய சிலையை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டு பகுதியை சேர்த்தவர் ராமச்சந்திரன். இவர் தன் மகன்களான ரபின், ராபர்ட் ஆகியோருடன் வழக்கம் போல சின்ன காலாப்பட்டு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். கடற்கரையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இவர்கள் வலையில் மீன்களுடன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்னறை அடி நீளமும், அரை அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை தலை ஒன்று கிடைத்துள்ளது.
உடனடியாக கரைக்கு திரும்பிய ராமசந்திரன் சிலையை கோயில் ஊர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைத்தார், இதனையடுத்து பேசிய ராமச்சந்திரன்," இப்பகுதியில் பல ஆண்டுகளாய் வலை வீசி மீன் பிடித்து வருகிறோம். இங்கு வலை வீசும்போது அடிக்கடி வலை சிக்கும், இங்கு கடலுக்கு கீழே மலையுடன் கூடிய பெருமாள் கோயில் ஒன்று இருக்கிறது", என தெரிவித்தார்.
இதே பகுதியைச் சேர்ந்த முதியவர் மாரிமுத்து கூறுகையில், "தன்னுடைய முன்னோர்கள் வழிபட்ட பெருமாள் கோயில் கடலுக்குள் இருக்கிறது. இதனை இதற்கு முன்பு கடலுக்குள் சங்கு எடுக்க மூழ்கியவர்கள் பெருமாள் கோயில் இருப்பதை பார்த்திருக்கிறார்கள். கடலுக்கடியில் இரண்டு குதிரையுடன் பெருமாள் சிலையுடன் கோயில் இருக்கிறது" என தெரிவித்தார்.
இதனையடுத்து தங்களுடைய முன்னோர்களும் மூதாதையர்களும் வழிபட்ட பெருமாள் கோயில் கடலுக்கு அடியில் இருப்பதை மீண்டும் மீனவ மக்கள் உறுதி செய்ததுடன் பெருமாள் தங்களுக்கு கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியுடன் சிலையை மக்கள் பார்த்த வண்ணம் செல்கின்றனர்.
இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் தகவல் அறிந்து மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலையை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...