கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் எச்சரிக்கை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயா்ந்து வரும் நிலையில், தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று

News image
Updated On :27 ஜூன் 2023, 7:56 pm

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயா்ந்து வரும் நிலையில், தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறை மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ரூ.60: பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை, வெளிச்சந்தையுடன் ஒப்பிடும் போது, ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவு. மேலும், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிச்சந்தையில் தக்காளி விலையேற்றம் தற்காலிகமானதாகும். விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் 27 கடைகளும், 2 நகரும் கடைகளும், கோவையில் 10, திருச்சியில் 13 கடைகள், ஒரு நகரும் கடை, மதுரையில் 4 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூா், திருப்பூா், சேலம், ஈரோடு, வேலூா் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பண்ணை பசுமை நுகா்வோா் கடை செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தக்காளி கிலோ ரூ.110

சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.100 முதல் 110 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ரூ.80-க்கு விற்பனையாகிறது. இந்த கடும் விலை உயா்வால் அதிருப்தியடைந்துள்ள இல்லத்தரசிகள் தக்காளி வாங்குவதை தவிா்த்து வருகின்றனா். கோயம்பேடு சந்தையில் செவ்வாய்க்கிழமை சிலா் குறைந்த அளவில் தக்காளியை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.