திமுக நிரந்தர ஆட்சியில் இருக்கும்; நாற்பதும் நமதே, நாடும் நமதே! மு.க. ஸ்டாலின்
திமுகவை நிரந்தரமாக ஆட்சியில் வைத்திருப்பேன் என பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின்
திமுகவை நிரந்தரமாக ஆட்சியில் வைத்திருப்பேன் என பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துப் பேசினர்.
அதனைத் தொடர்ந்து ஏற்புரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்துகாட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதற்காக திமுக தமிழகத்தில் நிரந்தரமாக ஆட்சியில் இருக்க வேண்டும். கொள்கையை பரப்ப கட்சி. கொள்கையை நிறைவேற்ற ஆட்சி. தமிழகத்தை தலை நிமிர வைப்போம்.
தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் வழங்கினோம். 80 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும் எனக் குறிப்பிட்டார்.
2024 மக்களவைத் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்றுசேர வேண்டும்.
காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரைசேராது. 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.
ஆன்லைன் தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறது என்று ஒப்புதல்வழங்கவில்லையோ.
முறையாக நிதிகளை வழங்குவதில்லை. ஜிஎஸ்டிக்கு பிறகு மாநிலங்களுக்கு நிதி உரிமைகள் இல்லை. இழப்பீடுகள் உரிய காலத்தில் தருவதில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்த அறிவிப்பும் கிடையாது.
இப்படி கொள்கைகளுடன் முரண்பட்டு மோதுகிறது பாஜக. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வியூகம் அமைக்கும் கூட்டமாக பிறந்தநாள் கூட்டம் அமைந்துள்ளது. அடுத்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும். அதுவே நீங்கள் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...