மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் அதிகாலை முதல் மழை: மக்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மழை பெய்து வருகிறது.

News image

தூத்துக்குடியில் அதிகாலை முதல் மழை

Updated On :1 மார்ச் 2023, 6:31 am

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மழை பெய்து வருகிறது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

Story image

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே மழையில் நனைந்தபடி வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள்.

Story image

மழை நீர் சூழ்ந்துள்ள தூத்துக்குடி சண்முகபுரம் சாலை

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.