ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: காங்கிரஸ் முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.
தபால் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (மார்ச் 2) 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11ஆயிரத்து 25 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

வாக்குப் பதிவு 
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ராஜாஜி புரத்தில் உள்ள ஒரு வாக்கு சாவடி மையத்தில் மட்டும் இரவு 9:30 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் வாக்களித்தனர். 

இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் "சீல்' வைக்கப்பட்டு, சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் அறை உள்ளேயும் வெளியேயும், அதன் சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் அங்கு ஐந்தடுக்கு பாதுகாப்பும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் 40 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தேசிய அளவில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: 
வாக்கு எண்ணிக்கை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன. 

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

ஒரு மேஜையில் இரண்டு அலுவலர்கள் ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள். அந்த வகையில் 1200-க்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிடுகிறார்கள். முகவர்கள் அனைவரும் சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி நுழைவாயிலில் தீவிர சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து வசதி செய்யப்பட்டு அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் உள்ளே சென்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். 

முன்னிலை: 
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கேவன் 160 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 

அதிமுக வேட்பாளர் தென்னரசு 60 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மின்னணு இயந்திர வாக்குகள் ஒவ்வொரு சுற்று வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மதியத்திற்கு பிறகு முன்னணி நிலவரம் தெரியவரும். இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும்' என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல் சுற்று
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னிலை நிலவரம்: 
காங்கிரஸ்: 5630 
அதிமுக: 1737 
நாம் தமிழர்: 284
தேமுதிக: 68

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com