நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா?

ஒருவேளை, துருக்கியில் ஏற்பட்டது போல 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா?
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஒருவேளை, துருக்கியில் ஏற்பட்டது போல 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கினால் சென்னை தாங்குமா? இது குறித்து ஆய்வு சொல்வது என்னவென்றால், 60 சதவிகித கட்டடங்கள் அபாயகட்டத்தில் இருப்பதாகவும், நகரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறுகிறது.

வேலூர் தொழில்நுட்ப மையத்தைச் (விஐடி) சேர்ந்த குழுவினர் நடத்திய நிலப்பரப்பின் தன்மை மற்றும் ஆய்வில், கட்டடங்களைச் சுற்றியிருக்கும் தளர்வான மணல்பாங்கு நிலப்பரப்புகள், நிலநடுக்கத்தின்போது தளர்ச்சியை ஏற்படுத்தி கட்டடங்கள் தங்களது பலத்தை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

சென்னையின் பெரும்பாலான நிலப்பரப்பு மணல், வண்டல் மற்றும் கல் பாங்கானதாக இருப்பதாகவும், பல இடங்களில் உயர்ந்த மற்றும் அதிக நிலத்தடி நீர்மட்டங்கள் நிலநடுக்கம் ஏற்படும்போது பரவலாக தளர்ச்சியாக அல்லது சேறாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த பாதிப்பு கடற்கரையை ஒட்டிய அதாவது எண்ணூர் முதல் கானத்தூர் வரை மற்றும் அதன் உள்பகுதிகளாக வியாசர்பாடி, சேத்துப்பட்டு, தேனாம்பேட்டை, தி நகர், கோட்டூர்புரம் மற்றும் சோளிங்கநல்லூர் பகுதிகளிலும் இந்த தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதில்லாமல், தரமணி, சாலிகிராமம், அண்ணாநகர் மேற்கு, கோயம்போடு, போரூர் பகுதிகளிலும் இதே வகையான தாக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு புஜ் நிலநடுக்கத்தின் போது சென்னை, நிலநடுக்க மண்டலத்தின் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு மாறியது, இதனால், சென்னை நிலநடுக்கத்தால் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் நிறைந்த மண்டலமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில புவியியல் ஆய்வாளர்கள் சென்னையைக் குறிப்பிடுகையில், சென்னை மற்றும் தென்பகுதிகள் நிலநடுக்க மண்டலம் 2 மற்றும் 3ல் இருப்பதால், மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

சென்னை மற்றும் தென்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட ரிக்டர் அளவில் 3 அல்லது 4 அளவுக்கு மட்டுமே ஏற்படும். அது அவ்வளவு அபாயகரமானது அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com