நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு
சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.


சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
நாம் தமிழர் கட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையும் படிக்க- சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!
இருத் தரப்பினரும் மாறி மாறி கற்கள், பாட்டில்களை வீசித் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாகக் கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...