ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்


ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். 

தமிழக அரசு சட்டப்பேரவையியில் 2வது முறையாக கொண்டுவந்து நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

மசோதாவில் சில திருத்தங்களைச் செய்யக்கோரி தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. 

இதனால், ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

அந்தக்குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து அக்டோபர் 17ஆம் தேதி மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பப்பட்டது.

இதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து கிடப்பில் இருந்த மசோதாவுக்கு தற்போது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசுக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com