சென்னை புறநகர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு - ஒரு பார்வை

சென்னை புறநகரில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை புறநகர் சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கும்
சென்னை புறநகர் சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கும்

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்குமாறு மாநில அரசு விடுத்த கோரிக்கைகளை தூர தள்ளிவிட்டு, சுங்கச் சாவடி கட்டணங்கள் 40 சதவிகிதம் வரை குறையும் என்ற மத்திய அரசின் உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, சென்னை புறநகரில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் மார்ச் மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  அதாவது ஒரு காருக்கு கட்டணமானது ரூ.5 முதல் ரூ.15 வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையிலிருந்து ஆந்திரம், கர்நாடகம், கோவை மற்றும் மதுரை செல்வதற்கு கூடுதல் செலவாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய சாலைப் போக்குரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடி கட்டணங்கள் 40 சதவிகிதம் அளவுக்குக் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வந்தால், பரனூர் மட்டுமல்ல, வானரகம், சூரப்பட்டு, நல்லூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அவ்வாறு நடக்கவேயில்லை. அதற்கு மாறாக, 7 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுங்கக் கட்டணம் பற்றி மத்திய அரசிடமிருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. வழக்கமாக ஆண்டு தோறும் உள்ளூர் விலைக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு சுங்கக் கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறோம். தற்போதும் அதையே செய்திருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைக் கழக அதிகாரிகள் கைவிரிக்கிறார்கள்.

அதாவது, 1992ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதத்திலும், 2008ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதத்திலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம்.

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கும் 29 சுங்கச்சாவடிகளில் சென்னையை சுற்றிலும் இருக்கும் பரனூர் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2005), ஆத்தூர் - திண்டிவனம் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2003), சிட்டாம்பட்டி (இயங்கத் தொடங்கிய ஆண்டு2010), பூதக்குடி (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2010), சூரப்பட்டு/வானகரம் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2005), எட்டூர்வட்டம் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2011), கப்பலூர் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2012), நல்லூர் (இயங்கத் தொடங்கிய ஆண்டு 2009)ஆகியவை அடங்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com