அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்!

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியல் அபாய மணியாக ஒலிக்கிறது.
அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்!
அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்!

சென்னை: தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியல் அபாய மணியாக ஒலிக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதேவேளையில் 17 மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று அதிகரித்தும் உள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த பிப்ரவரி மாதம் கோடை வெப்பம் குறைவாக இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

நெல்லையில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.28 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 5.31 மீட்டராக சரிந்துள்ளது.

திருப்பத்தூரில் 0.07 மீட்டருக்குத்தான் சரிந்துள்ளது. கிருஷ்ணகிரியல் 6.13 மீட்டரில் இருந்து தற்போது 2.67 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்கம் போல, கடந்த வடகிழக்குப் பருவமனை காலத்தில் ஜனவரி மாதம் வரை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வந்தது. ஆனால், பிப்ரவரியில் வெப்பம் அதிகரிக்கும் போது நீர்மட்டமும் குறையத் தொடங்கியது. அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள். அதே வேளையில் மக்களும் இக்கணமே சிக்கனத்தை கடைப்பிடித்து நீரை சேமிக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்போதுதான் கோடை வெயிலின்போது தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, நீர்நிலைகளை தூர்வாரி சரியாக பராமரிப்பதும், பயன்பாடற்று போன நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றில் நீர்சேமிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com