பெரம்பூா் முரசொலி மாறன் பூங்காவில் புதிதாக அமைக்கப்படவுள்ள கடற்பாசி பூங்கா பணிகளை மேயா் ஆா். பிரியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சாா்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 786 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் ஒப்பந்த முறையிலும், தத்தெடுப்பு முறையிலும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 584 பூங்காக்கள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நகா்ப்புறங்களை பசுமையாக்கி,இயற்கைச் சூழலை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது.
திரு.வி.க நகா் மண்டலத்துக்குள்பட்ட பெரம்பூா் முரசொலி மாறன் பூங்காவில் புதிதாக 9,000 சதுர அடியில் ரூ.17.50 மதிப்பீட்டில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பூங்காவில் மழைநீா் சேகரிப்பு வசதி, குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்தல் மற்றும் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளை மேயா் பிரியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது திரு.வி.க நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மண்டல அலுவலா் எஸ். முருகன் உட்பட பலா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்எல்சி-ல் சுகாதார ஆய்வாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருச்சி என்ஐடி-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

