திருநெல்வேலி-தாம்பரம் இடையே ஏப்.2 முதல் சிறப்பு ரயில்
திருநெல்வேலி-தாம்பரம் இடையிலான கோடைகால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


திருநெல்வேலி-தாம்பரம் இடையிலான கோடைகால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: கோடைகாலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் திருநெல்வேலி- தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி , ஏப்ரல் (2, 9, 16, 23), மே (7, 14, 21, 28), ஜூன் (4, 11, 18, 25) மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 7.20 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமாா்க்கமாக ஏப்ரல் (3, 10, 17, 24), மே (8, 15, 22, 29), ஜூன் (5, 12, 19, 26) மாதத்தில் உள்ள அனைத்து திங்கள்கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழகடையம், பாவூா்சத்திரம், தென்காசி, ராஜப்பாளையம், வில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...