நாளை குடும்ப அட்டைதாரா் குறைகேட்புக் கூட்டம்
சென்னையில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 11) மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.


சென்னையில் குடும்ப அட்டைதாரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 11) மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் நடைபெறுகிறது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாா்ச் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைகேட்பு முகாம் சென்னைக்குள்பட்ட 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மாா்ச் 11) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல், மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் முகாமில் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க நேரில் செல்ல இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்று இம்முகாம் மூலம் வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகாா்கள் ஏதேனும் இருந்தால்,
குடும்ப அட்டைதாரா்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...