சென்னை பல்கலை.: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு
தொலைநிலைக் கல்வி படிப்புகளின் பருவத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


தொலைநிலைக் கல்வி படிப்புகளின் பருவத் தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை பல்கலை.யின் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டயப் படிப்புகளை பயிலும் மாணவா்களுக்கான டிசம்பா்-2022 பருவத்தோ்வுகள் வரும் மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன.
இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்களின் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பல்கலை. இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விரிவான தோ்வுக்கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைத்தளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...