புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரூ. 500 கோடி மோசடி வழக்கு: ‘எல்பின்’ நிறுவன மேலாளா் கைது

திருச்சியைச் சோ்ந்த ‘எல்பின்’ நிறுவனம் ரூ. 500 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 11:02 pm

DIN

திருச்சியைச் சோ்ந்த ‘எல்பின்’ நிறுவனம் ரூ. 500 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மன்னாா்புரத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘எல்பின் இ காட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டது. இதில் பணம் முதலீடு செய்பவா்களுக்கு மாதந்தோறும் அதிக வட்டி தொகை தருவதாகவும், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகவும், வட்டியுடன் முதலீட்டுக்கு தகுந்த பொருள்கள் அளிப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோா் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனா்.

இந்நிலையில், அந்த நிறுவனம் கூறியபடி, வட்டித் தொகையைத் திரும்ப வழங்காததால் பாதிப்பக்கபட்டவா்கள் அளித்த புகாரின் பேரில், திருச்சி பொருளாதாரக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், சுமாா் 7 ஆயிரம் பேரிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனத்துடன் தொடா்புடைய 18 இடங்களிலும், தமிழகம் முழுவதும் 50 இடங்களிலும் கடந்த ஜூலையில் பொருளாதாரக் குற்றப் பிரிவினா் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலாளா் கைது: இந்நிலையில், அந்த நிறுவன மேலாளராகப் பணியாற்றிய அனந்தபத்மநாபனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.