சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு அரசு நிதி
சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


சத்து மாத்திரைகளை அதிகம் உண்டு உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் 4 மாணவிகள், 2 மாணவா்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை உட்கொண்டனா். அவா்களில் உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 மாணவிகளில் ஜெய்பா பாத்திமா என்பவா், சென்னைக்கு உயா் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியிலேயே உயிரிழந்தாா்.
உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும் நாசஜியா, குல்தூண் நிஷா, ஆயிஷா ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சமும் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...