கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை அறநிலை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை அறநிலை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.

பண்டிகை காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.

சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்ட நிலையில், 95 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், விரைவில் திறக்கப்படவுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிகட்டப் பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com