இது குறித்து லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் மாநில தலைவா் ஆா். பன்னீா்செல்வம் திருச்சியில் மேலும் கூறியது: போலி எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்ற முதல்வா், போலி எம் சாண்ட் குவாரிகளை சட்டத்துக்குள்படுத்தி, அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளாா். இதற்காக தமிழக முதல்வருக்கும், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கும், லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.